Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில்.டிக்டோக் நேரலைகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வந்தவர் விளக்கமறியலில்

மார்ச் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்டவாறு , பலவேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் நாடொன்றில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் டிக்டோக் தளத்தில் நேரலை வீடியோக்களை பதிவிட்டவாறு பல்வேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்துள்ளார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ,வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் வீடியோ பதிவிட்டவாறு , வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என அனைவருடனும் முரண்பட்டுக் கொண்டார்.

அதுபோன்று சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாம பொலிஸ் நிலையத்தினுள் சென்று , பொலிஸார் முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக நேரலை வீடியோக்களை வெளியிட்டு , பொலிஸாருடனும் முரண்பட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்கு சென்று , மாணவிகள் , அவர்களின் அனுமதியின்றி , டிக்டோக் தளத்தில் நேரலையில் காணொளிகளை பதிவிட்ட போது , பாடசாலையில் கடமையில் நின்ற பொலீஸார் அதிபரின் அனுமதியின்றி மாணவிகளை காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய போது , பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடனும் முரண்பட்டு , அவற்றினையும் காணொளிகளாக வெளியிட்டார்.

குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த நபரை கைது செய்த கொடிகாம பொலிஸார் விசாரணைகளின் பின்னர் அந்நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி பதிலடி வரிகளால் பதில் சொல்ல தயாராகும் கனடா, மெக்சிக்கோ.
அடுத்த செய்தி யாழ் – திருச்சி விமான சேவை ஆரம்பம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

போலி வலைத்தளங்கள் மூலம் பண மோசடி செய்ததாக கூறப்படும் எட்டு சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காலியில் மீண்டும் பேருந்து முன்னுரிமை பாதை சட்டம்!

ஆகஸ்ட் 2, 2025
இலங்கை

வல்வெட்டித்துறை பொலிஸ் தடுப்பு காவலில் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மக்களுக்கு சரியான முறையில் சேவையாற்றாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உபாலி சமரசிங்க

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?