வரிகள் இடைநிறுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஜனாதிபதி ட்ரம்ப் ஓர் உடன்பாட்டை எட்டுவார் என்று தான் நம்புவதாக கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக கனடா மற்றும் மெக்சிக்கோவை அமெரிக்கா சந்திக்கவுள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு புதன்கிழமையளவில் வரும் எனவும் வர்த்தக செயலாளர் லுட்னிக் கூறுகிறார்.
தற்போது கனடா உடனடியாக எதிர் நடவடிக்கைகளுடன் பதிலளித்துள்ளது. 30 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்புகள் மீது 25 சதவீத பழிவாங்கும் வரிகளை விதிக்கிறது,
மிகுதி 125 பில்லியன் டொலர் மதிப்புள்ள வரிகள் தொடர்ந்துவரும் 21 நாட்களில் விதிக்கப்படும் என கனடா ஏற்கெனவே அறிவித்துள்ளது.
கனடா, உலக வர்த்தக அமைப்பு (WTO) மூலம் கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம் (CUSMA) எனும் ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே மெக்சிக்கோவும் அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு எதிராக அதன் பதிலடி வரிகளால் பதிலளிக்கும் என்று அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறினார். இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.