பிரிட்டிஷ் கொலம்பியாவின் விஸ்லர் மற்றும் கரபால்டி ஏரிப் பகுதிகளில் பல மிதிவண்டி மற்றும் நடைபாதை வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் காட்டுப்பூனைகளின் தொடர்ச்சியான மற்றும் ஆக்ரோஷமான நடமாட்டம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக விஸ்லர் பகுதியில் இரண்டு காட்டுப்பூனைகள் மக்களை துரத்தியதாகவும், பின்தொடர்ந்ததாகவும், மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் நடைபயணம் மேற்கொள்வோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, பிளாகோம்ப மலையில் உள்ள அசண்ட் நடைபாதை மற்றும் அனைத்து மிதிவண்டிப் பாதைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.