எதிர்வரும் தை பொங்கல்,சுதந்திர தினம் மற்றும் ஏனைய வார நாட்களில் வரும் விடுமுறை நாட்கள் தொடர்பில் ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களுக்கான ரயில் அட்டவணை வெளியாகியுள்ளது.
விசேட காலப்பகுதிகளில் அதிகளவான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் அதனை சற்று குறைப்பதற்காக இலங்கை ரயில் திணைக்களம் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.