முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவடரங்கிய நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனக்கு காலவகாசம் வழங்குமாறும் அவர் மன்றில் கோரினார். இதற்கமையள, பிரதிவாதிகள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிமன்றம் தேவையேற்படின் மனுதாரர் தரப்பும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது.
முறையான பாதுகாப்பு மதிப்பீட்டிற்குப் பின்னர் அவரது பாதுகாப்பைக் குறைப்பதா அல்லது அதிகரிப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.