அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்இன் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள அடுத்த மாதத்திற்குள் கனடிய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சியான பழமைவாத கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இருந்த போதும் அமெரிக்க வரிக்கெதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றவேண்டிய தேவை இல்லை எனவும் மார்ச் 24 ஆம் திகதி திட்டமிடப்பட்டதை விட முன்னதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி தெரிவித்தார்.