கியூபெக்கின் மதச்சார்பின்மைச் சட்டமான Bill 21 தொடர்பில், கியூபெக் முதல்வர் பால் ஸ்ட்-பியர் பிளாமண்டன் மற்றும் மனிடோபா முதல்வர் வப் கினியூ இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
கனடாவின் உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை, இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு கியூபெக் பயன்படுத்திய notwithstanding clause தொடர்பான ஏற்பாட்டை உறுதிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மனிடோபா முதல்வர் வப் கினியூ, இந்தச் சட்டம் முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரைப் பாகுபாட்டுடன் நடத்துவதாகவும், இது சட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இனப் பாகுபாடு என்றும் விமர்சித்தார்.
இதற்குப் பதிலளித்த கியூபெக் முதல்வர், வப் கினியூவின் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்ததுடன், அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் கனடாவில் மதச்சார்பின்மை, மதச் சுதந்திரம் மற்றும் மாகாண உரிமைகள் தொடர்பான அரசியல் விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
