Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பரால் தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம்

நவம்பர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Screenshot
SHARE

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி, மதுபோதையில் டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமாக்கியுள்ளது

தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமானதால், அப்பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவை தடைப்பட்டுள்ளது.

அத்துடன், தப்பியோடிய டிப்பர் வாகனம் வீதிகளில் மணலை கொட்டியுள்ளமையால், வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொடிகாம பொலிஸார் இன்றைய தினம் அதிகாலை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது, கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்த வேளை , பொலிஸாரின் கட்டளையை மீறி டிப்பர் வாகனத்தை அதன் சாரதிகள் செலுத்தி தப்பியோடினார்.

டிப்பர் வாகனத்துடன் தப்பியோடி டிப்பர் வாகன சாரதியை பொலிஸார் துரத்தி சென்ற வேளை, டிப்பரில் இருந்த மணலை வீதியில் பறித்த வண்ணம் தப்பியோடினார்.

அதன்போது தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில், அதன் வயர்கள் டிப்பர் வாகனத்தில் கொளுவிய நிலையில் டிப்பர் தொடர்ந்து பயணித்தமையால், சுமார் 10 கம்பங்கள் முறிந்து சேதமாகியுள்ளன.

இந்நிலையில் தப்பியோடிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன், பளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சாரதியையும், உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த வேளை, இவர் மதுபோதையில் இருந்தமையும் உறுதி செய்துள்ளனர்

அதேவேளை குறித்த சம்பவத்தில், சேதமடைந்த தொலைத்தொடர்பு கம்பங்களை மாற்றி தொலைத்தொடர்பு சேவையை மீள வழங்க பணியாளர்கள் புனரமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்

முந்தைய செய்தி நெடுந்தீவு எரிபொருள் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது
அடுத்த செய்தி கியூபெக் – மனிடோபா முதல்வர்களிடையே Bill 21 சட்டம் தொடர்பில் கருத்து மோதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நெல்லியடி பொலிஸார் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு.

பிப்ரவரி 24, 2025
இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் எட்டாம் நாள் திருவிழா

ஆகஸ்ட் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கன மழையால் நுவரெலியா – பதுளை வீதியில் போக்குவரத்து தடை பாதிப்பு!

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

புதிய 815 இலக்க பிரத்தியேகப் பேருந்து சேவை, 17ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்.

ஜூன் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?