கியூபெக் மாகாணத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. நாளை, ஒக்டோபர் 5ஆம் திகதி, கியூபெக் மக்கள் வாக்களிக்க உள்ள நிலையில், தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போதைய அரசியல் நிலவரத்தில் Parti Québécois தலைவர் Paul St-Pierre Plamondon முன்னிலையில் இருப்பதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தலில் Parti Québécois, Coalition Avenir Québec, Quebec Liberal Party, Conservative Party of Quebec மற்றும் Québec solidaire ஆகிய ஐந்து முக்கிய கட்சிகளும் கவனம் பெற்றுள்ளன.
PQ ஆட்சிக்கு வந்தால், அடுத்த நான்கு ஆண்டுகளில் Quebec பிரிவினை தொடர்பான பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதாக Paul St-Pierre Plamondon உறுதியளித்துள்ளார்.
இதனால், நாளைய தேர்தல் முடிவு கியூபெக்கின் அரசியல் எதிர்காலத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

