மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார்.
மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்புவா நியூகினியா உட்பட மொத்தம் 15 நாடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
இந்நிலையில், மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
ஆனால், இதுவரை அது குறித்து மன்னர் சார்லஸ் எவ்வித
கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதனால், கனேடிய மக்கள் வருத்தமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இன்று மன்னர் சார்லசை சந்திக்கிறார்.
ட்ரூடோ மன்னரை சந்திக்கும்போது, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் விடயம் தொடர்பில் பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது