மொன்றியல் பகுதியில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும் என Environment Canada வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
பகல் நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 40 சதவீதமாகக் காணப்படுகின்றது.
காற்று மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும், வெப்பநிலை சுமார் 4 பாகை செல்சியஸாக நிலையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேரத்திலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் நள்ளிரவுக்குப் பின்னரும் மழை பெய்வதற்கான வாய்ப்பு 60 சதவீதமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு நேர வெப்பநிலையும் சுமார் 3 பாகை செல்சியஸாக நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மொன்றியல் பகுதியில் பயணம் மேற்கொள்வோர் மழைக்கேற்ற முன்னேற்பாடுகளுடன் பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
