Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

போக்லாந்து எண்ணெய் திட்டம்: ஆர்ஜென்டினாவின் கோரிக்கை நிராகரிப்பு

நவம்பர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

போக்லாந்து தீவுகளுக்கு அருகாமையில் முன்னெடுக்கப்படும் எண்ணெய் ஆய்வுத் திட்டத்தைத் தடுக்குமாறு ஆர்ஜென்டினா விடுத்த கோரிக்கையை, ஐ.நா. ஆதரவு பெற்ற சர்வதேச கடல் சட்டத் தீர்ப்பாயம் (International Tribunal for the Law of the Sea) நிராகரித்துள்ளது.

பிரித்தானியாவின் கடல்கடந்த ஆட்சிப்பகுதியான போக்லாந்து தீவுகளின் இறையாண்மை தொடர்பில் சர்ச்சை நிலவுவதாகக் கூறி, ‘சீ லயன்’ (Sea Lion) எண்ணெய் திட்டத்தை நிறுத்துமாறு ஆர்ஜென்டினா அரசாங்கம் கோரியிருந்தது.

எனினும், இறையாண்மை தொடர்பான விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கு இது சரியான நீதிமன்றம் அல்ல எனத் தீர்ப்பாயத்தின் தலைவர் சனிக்கிழமை (28.11.2026) தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பு 18-3 என்ற வாக்கு வித்தியாசத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போக்லாந்து தீவுகளிலிருந்து சுமார் 130 மைல்கள் (209 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள ‘சீ லயன்’ எண்ணெய் வயலில் சுமார் 1.7 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ரொக்ஹோப்பர் எக்ஸ்ப்ளோரேஷன் (Rockhopper Exploration) மற்றும் இஸ்ரேலின் நவிட்டாஸ் பெட்ரோலியம் (Navitas Petroleum) ஆகிய நிறுவனங்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் எண்ணெய் அகழ்வுப் பணிகளைத் தொடங்கவுள்ளன.

தீர்ப்புக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே, இது இறுதி முடிவல்ல எனக் குறிப்பிட்டதுடன், போக்லாந்து தீவுகள் ஆர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை என்றும் திட்டமிட்ட எண்ணெய் அகழ்வுத் திட்டத்தில் தொடர்புடைய ஐந்து நபர்கள் மீது தடைகள் விதிக்கப்படும் எனவும் ஆர்ஜென்டினா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், இத்தீர்ப்பை வரவேற்றுள்ள பிரித்தானியா, இது பிரித்தானிய அரசாங்கத்திற்குக் கிடைத்த தெளிவான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளதுடன், தீவுவாசிகளின் சுயநிர்ணய உரிமை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆர்ஜென்டினா ஏற்படுத்தும் அழுத்தங்களை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

1982ஆம் ஆண்டு போக்லாந்து தீவுகள் தொடர்பாகப் பிரித்தானியாவுக்கும் ஆர்ஜென்டினாவுக்கும் இடையே 74 நாட்கள் யுத்தம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்
அடுத்த செய்தி ஆபிரிக்காவில் எபோலா தடுப்பூசி பரிசோதனை ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தோனேசியாவில் 8பேருடன் மாயமான ஹெலிகொப்டர்!

செப்டம்பர் 2, 2025
உலகம்

பாகிஸ்தானில் புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு.

நவம்பர் 9, 2024
உலகம்

மெக்சிகோவில் விமான விபத்து

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடிப்பு – 147 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 17, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?