கியூபெக் தேர்தல் நாளில் வாக்காளர்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதியை வழங்கும் வகையில் BIXI சைக்கிள் சேவை இலவசமாக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நாளன்று Greater Montreal பகுதியில் BIXI பயன்படுத்தும் வாக்காளர்கள் குறிப்பிட்ட நேர வரம்புக்குள் இலவசமாக பயணம் செய்ய முடியும்.
காலை 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை, சாதாரண BIXI சைக்கிளில் 25 நிமிடங்கள் வரையிலும், e-bike-ல் 15 நிமிடங்கள் வரையிலும் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த வசதியினை Montreal Island மட்டுமல்லாமல் Laval மற்றும் North Shore, South Shore பகுதிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
Elections Québec இந்த நடவடிக்கை வாக்காளர்களுக்கு தேர்தல் நிலையங்களுக்கு செல்வதற்கான கூடுதல் போக்குவரத்து விருப்பத்தை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

