Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

சிறுவர்கள் லாக்கர்களில் அடைக்கப்பட்ட சம்பவம்: முறைப்பாடு கிடைக்கவில்லை என PNE தெரிவிப்பு

நவம்பர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண பாடசாலையொன்றில் சிறுவர்கள் லாக்கர்களில் (Lockers) அடைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தேசிய மாணவர் குறைகேள் ஆணையம் (PNE) தெரிவித்துள்ளது.

பெற்றோர்கள் அல்லது மாணவர்களிடமிருந்து உத்தியோகபூர்வ முறைப்பாடு கிடைக்கும் வரை, இவ்விவகாரம் குறித்து விசாரணையை ஆரம்பிக்கவோ அல்லது பரிந்துரைகளை வழங்கவோ தம்மால் முடியாது என அந்த ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கியூபெக் பாடசாலைகளில் சிறுவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிசெய்யும் உத்தியோகபூர்வ அமைப்பான தேசிய மாணவர் குறைகேள் ஆணையத்தின் பேச்சாளர் நிக்கோல் ஸ்டிபானிசிக் (Nicole Stipaničić) இது குறித்துத் தெரிவிக்கையில், ஊடகச் செய்திகள் மூலமாகவே தாம் இத்தகவலை அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

“மாணவர் குறைகேள் ஆணையச் சட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்களில் மாத்திரமே, பிராந்திய மாணவர் குறைகேள் அதிகாரிகள் (RSOs) தாமாக முன்வந்து விசாரணையை ஆரம்பிக்கவோ அல்லது மூன்றாம் தரப்பினரின் தகவல்களை ஆராயவோ முடியும்.

இச்சம்பவம் அல்லது இது போன்ற ஏனைய சம்பவங்கள் குறித்து பெற்றோர் அல்லது மாணவரிடமிருந்து முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய அதனைக் கையாள முடியும்” என நிக்கோல் ஸ்டிபானிசிக் மேலும் தெரிவித்தார்.

கியூபெக் மாகாணத்தின் பிளெய்ன்வில் நகரத்தில் அமைந்துள்ள பாடசாலையில் ஐந்து, ஆறு மற்றும் ஏழு வயதுடைய குறைந்தது மூன்று மாணவர்கள் லாக்கர்களில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், அவற்றில் சில பூட்டப்பட்டிருந்ததாகவும் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்ததை அடுத்து, பொலிஸாரும் இளைஞர் பாதுகாப்புப் பிரிவும் (DPJ) விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

அதேபோல், கியூபெக் கல்வி அமைச்சர் ஜோயல் ஆர்செனோ (Joël Arseneau) அமைச்சு மட்டத்திலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே, தேசிய மாணவர் குறைகேள் ஆணையம் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் குடும்ப வன்முறைக்கு எதிரான கூட்டணி தொடக்கம்!
அடுத்த செய்தி கியூபெக் கன்சர்வேட்டிவ் கட்சியில் புதிய நியமனங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹங்குரங்கத்த பகுதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி!

ஜூலை 2, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில், 4 மில்லியன் மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் இரகசிய ஆய்வகம்! – மூவர் மீது வழக்குப்பதிவு

ஜூலை 31, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் இன்று இரவு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடை!

செப்டம்பர் 23, 2026
கியூபெக்

இசபெல் போல்டுக் படுகொலை வழக்கு – ஆயுள் தண்டனை கைதிக்கு பிணை மறுப்பு

செப்டம்பர் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?