ஹங்குரங்கத்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததாக ஹங்குரங்கத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹங்குரங்கத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.