பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
இருப்பினும், மனுவில் கோரப்பட்டுள்ளபடி, அர்ச்சுனா பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதைத் தடுக்கும் இடைக்காலத்தடை உத்தரவை பிறப்பிக்கப் போவதில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்தது.
அதற்கமைய, குறித்த மனு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.