இன்று மாலை வேளையில் பெய்த பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்தில் ஈடுபடுகின்றவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
