Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கனடிய மத்திய அரசின் புதிய வரவுசெலவுத் திட்டத்திற்கு கியூபெக் அரசு விமர்சனம்!

நவம்பர் 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மத்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வரவுசெலவுத் திட்டம் தொடர்பாகக் கியூபெக் மாகாண அரசாங்கம் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அதேவேளை, வீடற்ற நிலைக்கு எதிரான நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டிய நகரசபைகளின் மேயர்கள் பலர் இந்த புதிய வரவுசெலவுத் திட்டத்திற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மார்க் கார்னியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “நமது விதியை நிர்ணயிப்பவர்கள்” (Masters of Our Destiny) எனும் தலைப்பிலான இந்த வரவுசெலவுத் திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 142 பில்லியன் டொலர் புதிய செலவினங்களையும், 159 பில்லியன் டொலர் புதிய வருவாய் மற்றும் சேமிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

அத்துடன், 2026-27 நிதியாண்டில் 62 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்துதல், உள்நாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு, கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை இலக்குகளாகக் கொண்டு இந்த வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வரவுசெலவுத் திட்டம் கியூபெக் மாகாணத்தின் முதன்மை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாகக் கியூபெக் மாகாண நிதியமைச்சர் நிகோலஸ் மார்சோ தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் நிதி நிலையைச் சீரமைக்கத் தமது தரப்பு போராடி வரும் வேளையில், மத்திய அரசின் இந்த வரவுசெலவுத் திட்டம் கியூபெக்கின் நிதி அமைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, சுகாதாரத் துறைக்கான மத்திய அரசின் நிதியுதவி வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகப் புளொக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சியின் தலைவர் ஈவ்-பிரான்சுவா பிளான்ஷேட் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் கியூபெக் மாகாணத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 3 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்பதால், தமது கட்சி இந்த வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

எனினும், கனடாவில் நிலவும் வீடற்ற நிலையை எதிர்கொள்வதற்காக நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ள 11.2 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டத்திற்கு கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான நகரங்களின் மேயர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், கியூபெக்கின் எதிர்க்கட்சிகளான கன்சர்வேடிவ், என்.டி.பி, கிரீன்ஸ் மற்றும் சிறு வணிக அமைப்புகளின் பிரதிநிதிகளும் மத்திய அரசின் இந்த வரவுசெலவுத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கொழும்பில் ‘வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்’ போக்குவரத்திற்கு பாதிப்பு!
அடுத்த செய்தி கனடாவின் பொருளாதாரத்தை உள்நாட்டிலேயே கட்டியெழுப்ப புதிய செலவுத் திட்டம் – அதிரடி அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகள்

மே 7, 2026
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்தை ரத்து செய்வது குறித்து மீண்டும் விவாதம்!

அக்டோபர் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாக்கு நீரிணை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி

ஏப்ரல் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் போதை பாவனைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடைபயணம்

மே 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?