டொராண்டோ நகரில் உள்ள நார்த் யார்க் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில், பாத்தர்ஸ்ட் வீதி மற்றும் ஃபிஞ்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரும் உயிரிழந்துள்ளதாகவும், இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொலை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
