Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மிச்சிகனில் அதிபர் டிரம்ப் பிரசாரம்: தீவிரமடையும் செனட் சபை போட்டி!

அக்டோபர் 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஜனநாயகக் கட்சியினருக்காகப் பிரசாரம் செய்த மறுநாளே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிச்சிகனின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) குடியரசுக் கட்சியினரைத் திரட்டிப் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இது அடுத்த வாரம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அம்மாநிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

மிச்சிகனில் முன்னாள் குடியரசுக் கட்சிப் பிரதிநிதி மைக் ரோஜர்ஸ் (Mike Rogers) மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed) ஆகியோருக்கு இடையே அமெரிக்க செனட் சபைக்கான கடும் போட்டி நிலவுகிறது.

அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றால், அமெரிக்க செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெறுவார்.

டிரம்ப், அப்துல் எல்-சயீதை ஒரு தீவிரவாதியாகச் சித்தரிக்க முயன்றதுடன், அவரின் நடுப்பெயரான முகமட் என்பதைக் கேலி செய்துள்ளார்.

எனினும், எல்-சயீத் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

மறுபுறம், மைக் ரோஜர்ஸ் எல்-சயீதுக்கு முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக எவ்வித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள எல்-சயீத், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தனது அமெரிக்க விசுவாசத்தைக் கேள்வி கேட்பது வெட்கக்கேடானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை (24.10.2026) டெட்ராய்ட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பராக் ஒபாமா, எல்-சயீத் மீதான தாக்குதல்கள் அவரை குறைந்த தேசபக்தி கொண்டவராகக் காட்ட முனையும் முயற்சி என்று விமர்சித்தார்.

2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் 66 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற போர்ட் ஹுரோன் (Port Huron) பகுதியில் நடைபெறும் இந்த பிரசாரக் கூட்டத்தில், அமெரிக்க-கனடா வரி விதிப்புப் பிரச்சினை முக்கியத்துவம் பெறும்.

வர்த்தக மோதலால் டெட்ராய்ட்டை மையமாகக் கொண்ட அமெரிக்க வாகனத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், ரோஜர்ஸ் அதிபரின் கொள்கையிலிருந்து விலகியுள்ளார்.

தற்போது அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் முறையே 53-47 மற்றும் 218-214 என்ற பெரும்பான்மையில் உள்ள நிலையில், அதை மாற்ற ஜனநாயகக் கட்சிக்கு இரு சபைகளிலும் தலா நான்கு இடங்கள் தேவையாக உள்ளன.

முந்தைய செய்தி டிரம்பின் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்த பராக் ஒபாமா!
அடுத்த செய்தி குட் நியூஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

சீனாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

அக்டோபர் 24, 2025
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்துக்கு IMF விடுத்த எச்சரிக்கை!

அக்டோபர் 13, 2026
உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும்-செலென்ஸ்கி!

செப்டம்பர் 8, 2025
உலகம்

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?