பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்தொன்று பதிவாகியுள்ளது.
இதில் கார் ஒன்றும், இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் கெப் ரக வாகனமொன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் கெப் வாகனத்தின் மீது கார் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

