நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது சிறையில் உள்ளமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவர் கூறியதாவது,
நாமல் அவர்கள் சிறையில் இருந்தாலும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்ந்தது நடைபெற்று வருகின்றது.
அதுமட்டுமில்லாமல் அவர் கட்சியின் பொது தலைவர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதாகவும் சாந்த பண்டார கூறினார்.
மேலும் தற்போதைய அரசின் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இதன்படி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் அடுத்த வாரம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

