கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் நேற்று சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற முதியவர் பலத்த காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.