Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு

மே 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

6 அணிகள் பங்கேற்றுள்ள 10ஆவது பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி – 20 கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி தொடங்கி ராவல்பிண்டி, கராச்சி, முல்தான், லாகூர் ஆகிய 4 நகரங்களில் நடந்து வந்தது. வருகிற 18 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

இதில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 27ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ்-பெஷாவர் ஜால்மி அணிகள் மோத இருந்தன. ஆனால் பாதுகாப்பு அச்சத்தால் இந்த போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் முகாம் மீது துள்ளிய தாக்குதல் நடத்தியது.

அத்துடன் பாகிஸ்தானில் பல இடங்களில் ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதனால் அந்த நாட்டில் பதற்றம் நிலவுகிறது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில் நடந்த டிரோன் தாக்குதலில் கட்டிடம் சேதமடைந்ததுடன், சிலர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எல்லா அணி நிர்வாகத்துடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் இரவு நடக்க இருந்த லீக் போட்டியை மற்றொரு நாளுக்கு தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் பி.எஸ்.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் நிராகரித்தது.

இந்நிலையில் பி.எஸ்.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி திடீர் சுகவீனம் காரணமாக பாலகனொருவர் உயிரிழப்பு…
அடுத்த செய்தி மாணவி மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை – தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்திய அரிசிக்கு வரி விதிக்க ட்ரம்ப் அறிவிப்பு!

டிசம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மலேசியாவில் பேருந்து விபத்தில் சிக்கி 15 மாணவர்கள் உயிரிழப்பு!

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலநடுக்கம்….

மார்ச் 3, 2025
உலகம்

டார்ஜிலிங்கில் கனமழை – 24 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?