பொதுபலசேனா அமைப்பின் பொது தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென கோரி பிக்குகள் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
குறித்த போராட்டமானது கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாக்கல் செய்த மனுவை கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம பரிசீலித்ததுடன், பூங்காவில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கு நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாற்றமின்றி தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.

