வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ” அலையோடு உறவாடு ” என்ற தொனிபொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
காங்கேசன்துறை கடற்கரையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் உற்பத்தி.பொருள் விற்பனை, பண்பாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் இன்னிசை இசைக்கச்சேரி ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளது.

