Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!

அக்டோபர் 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தமிழக அரசின் சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அண்ணன் சீர் திட்டத்தின்’ கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் இனி ஆதார் எண் வைத்திருப்பது கட்டாயம் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான புதிய தகுதி விதிமுறைகள் மற்றும் மாற்று ஆவணங்கள் குறித்த விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

ஏழைப் பெண்களின் திருமண தகுதிக்காக, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் திருமணத்தின்போது 8 கிராம் எடையுள்ள (1 சவரன்) 22 கரட் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய உத்தரவின்படி, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணுக்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும்.

இதுவரை ஆதார் அட்டை இல்லாத பெண்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக உடனடியாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் ஆதார் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், அவர்களுக்கு வசதியான இடங்களில் சிறப்பு ஆதார் பதிவு முகாம்களை அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் இன்னும் எண் ஒதுக்கப்படாத நிலையில் உள்ளவர்கள், தங்களது ஆதார் பதிவு அடையாளச் சீட்டுடன், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம் அல்லது வட்டாட்சியர்/அரசு அதிகாரி வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை மாற்று அடையாள ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம்.

கைரேகையின் தரம் குறைவாக இருப்பதன் காரணமாக ஆதார் அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், பயனாளிகளுக்குப் பயன்கள் மறுக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இதற்காக கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கும் வசதிகளை ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த முறைகளிலும் அங்கீகாரம் பெற முடியாத சூழலில், ஆதார் கடிதத்தில் உள்ள QR Code சரிபார்த்து திட்டத்தின் பயன்களை வழங்கலாம் என்றும், அனைத்து நடைமுறைகளும் தோல்வியடைந்தால் மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துளது.

முந்தைய செய்தி ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
அடுத்த செய்தி ‘சீன்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கட்டுமான தளத்தில் நிலச்சரிவு!

அக்டோபர் 19, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

100 வயதை கடந்த முதலமைச்சர் காலமானார்!

ஜூலை 21, 2025
இந்தியா

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்ற அனுமதி

செப்டம்பர் 10, 2026
இந்தியாவிசேட செய்திகள்

தமிழக தேர்தலில் முன்னிலை வகிக்கும் தவெக தலைவர் விஜய்

மே 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?