ஜித்து மாதவன் எழுத்து மற்றும் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம் நடித்துள்ள ‘சீன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏரோபிளேன்’ பாடலை கானா பாலா பாடியுள்ளார்.
இப்பாடலை ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் எழுதியுள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி இவ யார்ரா’ பாடலை ராஜ்பிரியனே எழுதிப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலாசிரியர் என்பதைத் தாண்டி இப்படத்தில் ராஜ்பிரியன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நஸ்லனும் நடித்துள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வருகிற நவம்பர் 6ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

