சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) ‘U/A’ சான்றிதழை வழங்கியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாகும்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது தணிக்கைச் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதி திரையரங்குகளில் உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

