Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய் – ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

அக்டோபர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சென்னையில் மழைபாதிப்பு பணிகளுக்காக ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்துள்ளார்.

அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும், வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று(17.10.2026) 6 இடங்களில் அதி கனமழை பெய்த நிலையில், இன்று 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதுடன், நாளை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு பெய்த அதி கனமழை காரணமாக 280 இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத ஜெனரேட்டர்கள் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு, இன்று காலைக்குள் 273 இடங்களில் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதாக கமிஷனர் தெரிவித்தார். மேலும் 9 இடங்களில் சாய்ந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

இந்நிலையில், மழைபாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளைப் பார்வையிடவும், அது குறித்து ஆய்வு செய்யவும் முதலமைச்சர் விஜய் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வருகை தந்தார்.

அங்குள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் மற்றும் அவசர கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் துரிதமாக செயல்படுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினார். முதலமைச்சராகப் பதவியேற்ற பின் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வருவது இதுவே முதல்முறையாகும். தொடர்ந்து அவர் பொறுப்பு அமைச்சர்களுடன் மழைபாதிப்பு தடுப்பு குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி லிதுவேனியா வான்பரப்பில் இனந்தெரியாத பறக்கும் பொருள்!
அடுத்த செய்தி காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ஆணவக் கொலை-15 வயது சிறுமி உயரிழப்பு!

நவம்பர் 9, 2025
இந்தியா

பிரான்சிடம் இருந்து ரபேல் கடற்படை போர் விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா!

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

நாம் தமிழர் ஆட்சி வந்தால் தமிழகத்தில் பெரிய மாற்றம் – சீமான் அறிவிப்பு”

மார்ச் 31, 2026
இந்தியா

109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்

ஆகஸ்ட் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?