பிரான்சிடம் இருந்து ரபேல் கடற்படை போர் விமானங்களை இந்தியா பெற்றுக் கொள்ளவுள்ளது.
இந்தியக் கடற்படையின் தாக்குதல் திறன்களை வலுப்படுத்த, 63,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பில், 26 ரபேல் கடற்படை போர் விமானங்கள் வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்முதற் செயற்பாட்டுக்கான அனுமதியை இந்திய மத்திய அரசு வழங்கியுள்ளது. இருதரப்பு ஒப்பந்தம் உறுதியான பின்னர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை பிரான்ஸ் தவணை முறையில் தயாரித்து வினியோகம் செய்யும் எனத் தெரியவருகின்றது.