தமிழ்நாட்டை தற்போது ஆண்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகமானது கபட நாடகக் கச்சேரிகளை மட்டுமே நிகழ்த்துவதாக, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விமர்சித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய்யைச் சொல்வதும் ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப் பெரிய பொய்yஐச் சொல்வதும் திராவிட முன்னேற்றக்
கழகtஹ்தின் பழக்கம் என, அவர் குற்றம் சுமத்தினார். அக்கட்சியின் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026ம் ஆண்டு
சட்டசபை தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.