Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

சிஜேபி கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்!

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிஜேபி அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களை நோக்கி, “சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவர் உறுதியளித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி உள்ளே நுழைந்ததாகக் கூறி, சிஜேபி அமைப்பைச் சேர்ந்த சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா மற்றும் அஜிங்கியா ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 5 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், அசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இதுவென்றும், இது ஒட்டுமொத்த தலைமுறையையும் அச்சுறுத்தி அமைதிப்படுத்தும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நமது அரசியலமைப்பு உரிமைகளை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற ஜனநாயகப் படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் உள்ள 14,000 மக்கள் காவல்துறையினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

மக்களின் ஜனநாயகக் கோட்பாட்டை மறந்து செயல்படும் அரசு தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இறுதியாக, நாட்டின் இளம் தலைமுறையினருக்குத் தைரியம் ஊட்டும் வகையில், கோடிக்கணக்கான இளைஞர்களுக்குத் தமது சகோதரி என்ற முறையில் இன்றும், என்றும், எப்போதும் தாம் துணையாக இருப்பேன் என்றும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று நாட்டைப் பாதுகாப்போம் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் போப் லியோ
அடுத்த செய்தி டெல்லி விமான நிலையத்தில் அபிஜித் தீப்கேவுக்கு எதிர்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

செப்டம்பர் 7, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

செப்டம்பர் 1, 2026
இந்தியா

மத்திய பிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: 82 லட்சம் விவசாயிகள் தவிப்பு!

ஆகஸ்ட் 16, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

மே 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?