Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் அபிஜித் தீப்கேவுக்கு எதிர்ப்பு!

அக்டோபர் 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

டெல்லி விமான நிலையத்தில் காக்கரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை நோக்கி நபர் ஒருவர், “நாட்டை ஏன் நாசமாக்குறீங்க?” என்று சத்தமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், இதைக் கண்டு கொள்ளாமல் புன்னகைத்தபடியும், கட்டைவிரலைக் காட்டியபடியும் அங்கிருந்து வெளியேறியுள்ளார் தீப்கே.

மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த அபிஜித் தீப்கே, கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தனது பாட்டியின் மறைவையொட்டி அங்கு சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் கியான் குமார் அலுவலகத்திற்கு எதிராக சி.ஜே.பி தரப்பில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு தலைமை தாங்க டெல்லி திரும்பிய விமானத்தில், அவரை டெல்லி காவல்துறை வளைத்துப் பிடித்து காவலில் எடுத்தது.

டெல்லி திரும்பியவுடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அபிஜித் தீப்கே, மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தனது நண்பர்களான அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஐந்து நாள் நீதிமன்றக் காவலை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

“தேசியக் கொடியை ஏந்துவது இந்த நாட்டில் குற்றமா? அசுதோஷ் மற்றும் சௌரவ் ஆகியோர் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று தேசியக் கொடியை ஏந்தியதற்காக ஐந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏன் இந்த நிலை? ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொது இடங்களில் தேசியக் கொடியை ஏந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதே போன்ற ஒரு சூழல் தற்போது மீண்டும் அரங்கேறி வருகிறது” என்று தீப்கே ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஜே.பி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், கடந்த திங்கட்கிழமை காலையில் தடை செய்யப்பட்ட பகுதியை மீறி நுழைந்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, ஜந்தர் மந்தர் பகுதியை மத்திய அரசு போராட்டத் தளமாகப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி அறிவித்திருந்த சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முந்தைய செய்தி சிஜேபி கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்!
அடுத்த செய்தி இயக்குனர் மோகன்.ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

ஆகஸ்ட் 3, 2026
இந்தியா

பாரத பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர்

மே 27, 2026
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ஆணவக் கொலை-15 வயது சிறுமி உயரிழப்பு!

நவம்பர் 9, 2025
இந்தியா

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை

ஆகஸ்ட் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?