இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
