Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண தேர்தல் முறையில் மாற்றம் தேவை- வலுக்கும் கோரிக்கை!

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
People cast ballots on the second day of advance voting, ahead of provincial elections, in Montreal on Monday, Sept. 28, 2026. THE CANADIAN PRESS/Christopher Katsarov
SHARE

கியூபெக் மாகாணச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாகாணத்தின் தேர்தல் முறையில் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.

இத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ‘பார்ட்டி கியூபெகோவா’ (Parti Québécois – PQ) கட்சி, ‘கியூபெக் சொலிடேர்’ (Québec solidaire – QS) மற்றும் கன்சர்வேடிவ் ஆகிய கட்சிகள், தற்போதைய தேர்தல் முறைக்கு மாறாக ‘விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை’ (Proportional Representation) அறிமுகப்படுத்துவதாக கியூபெக் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தன.

வாக்காளர்கள் அளிக்கும் வாக்குச் சதவீதத்திற்கு ஏற்பக் கட்சிகளுக்குச் சட்டசபையில் ஆசனங்கள் கிடைப்பதை உறுதி செய்வதே, ‘விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் முக்கிய நோக்கமாகும்.

கியூபெக்கில் தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறையைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ‘கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (CAQ) கட்சி 41 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றபோதிலும், சட்டசபையின் மொத்த ஆசனங்களில் 71 சதவீதத்தைக் கைப்பற்றி மாபெரும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.

இது தற்போதைய தேர்தல் முறையின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.

முன்னதாக 2018ஆம் ஆண்டுத் தேர்தலின் போது, அப்போதைய CAQ கட்சியின் தலைவரும் முன்னாள் கியூபெக் முதல்வருமான பிரான்சுவா லெகோ (François Legault), தேர்தல் முறையைச் சீரமைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இருப்பினும், 2021ஆம் ஆண்டு கியூபெக் முதல்வர் பதவியில் இருந்தபோது அவர் தனது அந்த வாக்குறுதியைக் கைவிட்டிருந்தார்.

தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பார்ட்டி கியூபெகோவா கட்சி மிகக் குறைந்த வாக்குச் சதவீதத்தைப் பெற்றே ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், தேர்தல் முறைச் சீர்திருத்தத்திற்கான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் புதிய அரசியல் அத்தியாயம்: PQ தலைமையில் சிறுபான்மை அரசு!
அடுத்த செய்தி யாழில். பெண் கொடூரக் கொலை: தாயார் படுகாயம்; சந்தேகநபர் புகையிரதம் முன் பாய்ந்து உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

டில்ஷி அம்ஷிகா குறித்து நீதியான விசாரணை வேண்டும் நாமல் ராஜபக்ச வலியுறுத்து.!!

மே 6, 2025
1
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தலில் வெற்றி பெறும் தமிழர் யார்?

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்!

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பாக விசாரணை முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?