Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தலில் வெற்றி பெறும் தமிழர் யார்?

பிப்ரவரி 27, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாண சபைக்கான முன்கூட்டிய தேர்தலில் புரோகிரசிவ் கன்சர்வேடிவ் (PC), லிபரல் மற்றும் நியூ டெமாக்ராடிக் கட்சி (NDP) சார்பாக ஐந்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குறிப்பாக, ஸ்கார்பரோ வடக்கு தொகுதியில் இரு தமிழ்ப் பெண் வேட்பாளர்கள் முன்னிலை பெறுகின்றனர். அதேநேரம், தற்போதைய PC கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான லோகன் கணபதி மற்றும் விஜய் தணிகாசலம் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.

முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் – புரோகிரசிவ் கன்சர்வேடிவ் கட்சி (PC):

லோகன் கணபதி (பதவியிலுள்ள MPP) மற்றும் விஜய் தணிகாசலம் (பதவியிலுள்ள MPP): இவர்கள் தற்போதைய மாகாண சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கருத்து கணிப்பாளர்கள் இவர்களின் வெற்றி வாய்ப்புகளை “பிரகாசமானவை” என மதிப்பிடுகின்றனர்.

ஜூட் அலோசியஸ்: ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் PC கட்சியின் சார்பாக முதன்முறையாக போட்டியிடுகிறார்.

ஒன்ராறியோ லிபரல் கட்சி 

அனிதா ஆனந்த ராஜன்: ஸ்கார்பரோ வடக்கு தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிடும் இவர், கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார்.

தட்சனா நவநீதன் ஸ்கார்பரோ வடக்கு தொகுதியில் NDP சார்பாக போட்டியிடும் இவர், 2023 – இல் நடந்த ஸ்கார்பரோ – கில்ட்வுட் இடைத்தேர்தலில் NDP வேட்பாளராக பங்கேற்றிருந்தார்.

ஒன்ராறியோ மாகாண சபை செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28-இல் கலைக்கப்பட்டு, பிப்ரவரி 27-இல் முன்கூட்டிய தேர்தல் நடைபெற உள்ளது. PC கட்சியின் ஆதிக்கத்தை சவாலாக்கும் வகையில், ஸ்கார்பரோ வடக்கு தொகுதியில் அனிதா ஆனந்த ராஜன் (லிபரல்) மற்றும் தட்சனா நவநீதன் (NDP) ஆகியோரின் போட்டி குறிப்பிடத்தக்கது.

PC கட்சியின் லோகன் கணபதி மற்றும் விஜய் தணிகாசலம் ஆகியோர் தங்கள் தொகுதிகளை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஒன்ராறியோவில் PC கட்சியின் வலுவான அரசியல் செல்வாக்கு பிரதிபலிக்கிறது. மறுபுறம், ஸ்கார்பரோ வடக்கு மற்றும் ஸ்கார்பரோ- கில்ட்வுட் தொகுதிகளில் தமிழ் வேட்பாளர்களின் போட்டி, ஒன்ராறியோவில் தமிழ் சமூகத்தின் அரசியல் ஈடுபாடு வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

முந்தைய செய்தி ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.
அடுத்த செய்தி கனடா, மெக்சிகோ, சீன மீது வரி விதிக்கும் அமெரிக்கா..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை மீனவர்களை தாக்கிய தமிழக மீனவர்கள்

ஏப்ரல் 28, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி !

மே 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?