Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் புதிய அரசியல் அத்தியாயம்: PQ தலைமையில் சிறுபான்மை அரசு!

அக்டோபர் 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், போல் செயிண்ட்-பியர் பிளமண்டன் (Paul St-Pierre Plamondon) தலைமையிலான தனிநாட்டுக் கொள்கையைக் கொண்ட ‘பார்ட்டி கியூபெகோவா‘ கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினைப் பெற்று புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.

எனினும், அக்கட்சிக்குச் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் சிறுபான்மை அரசையே அமைக்கவுள்ளது.

கடந்த தேர்தலில் வெறும் மூன்று ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த பார்ட்டி கியூபெகோவா கட்சி, இம்முறை அடைந்துள்ள இந்த வெற்றி மாகாண அரசியலில் மிகப்பெரிய மீள் வருகையாகக் கருதப்படுகிறது.

இத்தேர்தல் வெற்றியின் மூலம், கனடாவிலிருந்து கியூபெக் மாகாணத்தைப் பிரித்து தனிநாடாக அறிவிப்பது குறித்த மற்றொரு சுயாட்சி வாக்கெடுப்பை (Sovereignty Referendum) நடத்துவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இதுவரை ஆட்சியில் இருந்த ‘கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (Coalition Avenir Québec – CAQ) கட்சி இத்தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்து வீழ்ச்சியடைந்துள்ளது.

அக்கட்சியின் அமைச்சர்களான ஜான்-பிரான்சுவா ரோபெர்ஜ் (Jean-François Roberge) மற்றும் பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தங்களின் தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளனர்.

‘கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (Coalition Avenir Québec – CAQ) கட்சி, சட்டமன்றத்தில் தனது அனைத்துத் தொகுதிகளையும் இழந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் கியூபெக் லிபரல் கட்சி (Quebec Liberal Party) குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் சார்ள்ஸ் மிலியார்ட் (Charles Milliard) தனது தொகுதியில் வெற்றி பெற்று முதன்முறையாக, கியூபெக் சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளார்.

மேலும், கியூபெக் கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party of Quebec) இத்தேர்தலில் தனது அரசியல் வரலாற்றில் முக்கிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

கியூபெக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் எரிக் டுஹைம் (Éric Duhaime) உட்பட அதன் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, முதன்முறையாக கியூபெக் சட்டமன்றத்தில் (National Assembly) உறுப்பினர்கள் ஆகவுள்ளனர்.

கியூபெக் மாகாணச் சட்டசபையில் எக்கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பார்ட்டி கியூபெகோவா கட்சி பிற கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்தவுள்ளது.

இதனால் புதிய கொள்கைகளை நிறைவேற்றுவதிலும் சுயாட்சி வாக்கெடுப்புக்கான முயற்சியிலும் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக் முதல்வராகும் பிளமண்டன் – பிரதமர் மார்க் கார்னி வாழ்த்து.
அடுத்த செய்தி கியூபெக் மாகாண தேர்தல் முறையில் மாற்றம் தேவை- வலுக்கும் கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் நீண்ட நேரம் ஸ்தம்பித்திருந்த மெட்ரோ ரயில் சேவை

மே 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

எல்ல – வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிதி!

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிறப்பாக நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் போட்டி

ஜூலை 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?