Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

லோங்குயேவில் பாலியல் குற்றச்சாட்டு – மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

செப்டம்பர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணம், லோங்குயே (Longueuil) நகரில் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகக்
குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களையும் தகவல்களை அறிந்தவர்களையும் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு லோங்குயே பொலிஸ் திணைக்களம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரிடமிருந்து
பாதிக்கப்பட்ட மேலதிக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகநபர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பொது இடங்கள் வாயிலாகவும் தனக்குத் தேவையான நபர்களைத் தொடர்பு கொண்டு,
அவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருக்கலாம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் மற்றும் இளம் பெண்கள் என சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பில் லோங்குயே பொலிஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபரின் குற்றப் பின்னணி மற்றும் அவர் கையாண்ட முறைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இன்னும் பல பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியில் வர தயங்கிக்கொண்டிருக்கலாம் என தாம் நம்புவதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இது குறித்த தகவல்களை அறிந்த பொதுமக்கள், லோங்குயே பொலிஸாரின் பிரத்யேக தொலைபேசி
இலக்கத்தை இரகசியமான முறையில் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொண்ட்ரியால் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள லோங்குயே பகுதியில், கடந்த சில காலமாக இணையவழியிலும் நேரடித் தொடர்புகள் மூலமாகவும் இடம்பெறும் பாலியல் குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அடுத்த செய்தி பார்ட்டி கியூபெக்வா கட்சி மீது சர்வதேச மன்னிப்புச் சபை கடும் விமர்சனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

புசர்விலில்(Boucherville) இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் – பொலிஸார் தேடுதல் நடவடிக்கை

ஜூன் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

விற்பனை செய்யப்பட்ட மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளை திரும்பப் பெற உத்தரவு

மே 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வழக்கறிஞர்கள்

செப்டம்பர் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?