இலையுதிர் காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், மொன்றியல் உள்ளிட்ட தெற்கு Quebec பகுதிகளில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
இன்று மொன்றியலில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 16°C ஆக இருக்கும் என Environment Canada முன்னறிவித்துள்ளது.
பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை Quebec மாகாணத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று திங்கட்கிழமை இரவு முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை வரை உறைபனி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியம் அல்லது அதற்குக் கீழ் செல்லக்கூடும் என Environment Canada தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாகாணத்தின் பல பகுதிகளில் வானிலை தெளிவடையும் என்றும், மொன்றியலில் வெப்பநிலை மீண்டும் சுமார் 20°C வரை உயரக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பயணம் செய்யும் மக்கள் குளிர்ச்சியான வானிலைக்கு ஏற்ப தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்


