கொழும்பிலிருந்து மஸ்கெலியாவுக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
.
பேருந்தில் 20 பேர் பயணித்ததாகவும் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் நோர்டன் பிரிட்ஜ் காவல்துறையினர் தெரிவித்தனர்
