பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் இன்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் நபரொருவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தெரிய வருகையில் துப்பாக்கி செயல்படாததால் குறித்த துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
