Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் இன்று 26ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ளது.
Quebec மக்கள் அக்டோபர் 5ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர். இன்றைய பிரச்சார நடவடிக்கைகளில், Coalition Avenir Québec தலைவர் Christine Fréchette Coaticook பகுதியில் வர்த்தக நிறுவனங்களைச் சந்திக்க உள்ளார்.
Quebec Liberal Party தலைவர் Charles Milliard, Montréalக்கு வெளியேயுள்ள Sainte-Thérèse பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட உள்ளார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற விவாதங்களில் fracking உள்ளிட்ட பல்வேறு கொள்கை விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்திருந்தன.
மேலும் கட்சித் தலைவர்கள் shipping, forestry, பிறப்பு விகிதம் மற்றும் வீட்டு கொள்முதல் நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தங்களது கொள்கை முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.
இன்றைய நிலையில், தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் வாக்குறுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு, தங்களது முடிவை சுய விருப்பத்துடன் எடுக்கவேண்டும் .
Quebec தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறுகிறது.


