இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள மராபி எரிமலை இன்று திடீரென வெடித்தது.
இது எச்சரிக்கை விடும் வகையில் மிக அதிக உயரத்திற்கு எரிமலை சாம்பலை வெளியேற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், 4 நிலநடுக்கங்களும் ஏற்பட்டு உள்ளன. 1.6 முதல் 3.6 வினாடிகள் வரையிலான இடைவெளியில் 14 முதல் 36 வினாடிகள் வரையிலான கால அளவில் அவை ஏற்பட்டன.
எனினும், எந்தளவு உயரத்திற்கு சாம்பல் புகையை வெளியேற்றியது என்பது பற்றிய உடனடி தகவல் வெளியிடப்படவில்லை.
குறித்த எரிமலையை சுற்றிய 3 கி.மீ. தொலைவுக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
