மொன்றியலை தளமாகக் கொண்டு இயங்கும் ‘ஸ்பைருலினா’ (Spirulina) நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த பல்வேறு வகையான ஆற்றல் உருண்டை உணவுப்பொருட்களில், குறிப்பிடப்படாத ஒவ்வாமைப் பொருட்கள் (Allergens) இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப்பெறுமாறு கனடிய உணவுப் பரிசோதனை முகவர் நிலையம் (CFIA) மற்றும் கியூபெக் மாகாண சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தயாரிப்புகளின் லேபிள்களில் குறிப்பிடப்படாத பால், சோயா, நிலக்கடலை மற்றும் பிற விதைகள் கலந்திருப்பது உணவுப் பாதுகாப்பு ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் தயாரிப்புகளை உட்கொண்டதால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை அனைத்தும் சந்தையில் இருந்து அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.


