Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் ஆங்கில வாக்காளர்களை குறிவைக்கும் கியூபெக் கன்சர்வேடிவ் கட்சி

செப்டம்பர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசியலில் லிபரல் கட்சியின் பாரம்பரிய ஆதரவு தளமாக விளங்கும் ஆங்கில மொழிப் பேசுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளைத் தன்வசம் ஈர்க்கக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் எரிக் துஹேம் (Éric Duhaime) தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் புதிய அரசியல் சூழ்நிலை மற்றும் தேர்தல் வரவு செலவுத் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த உத்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆளும் CAQ அரசாங்கம், பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு கொண்டுவந்துள்ள ’96-ஆம் இலக்க மொழிச் சட்டம்’ (Bill 96) மூலம் ஆங்கில மொழிச் சமூகத்தினரின் உரிமைகளைப் பறித்து அவர்களைப் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தியுள்ளதாக, எரிக் துஹேம் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், முதன்மை எதிர்க்கட்சியான லிபரல் கட்சி, இந்தச் சட்டத்தை எதிர்ப்பதில்  முற்றிலும் பலவீனமாகச் செயற்பட்டுத் தனது வாக்காளர்களைக் கைவிட்டுள்ளது” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கியூபெக் சிட்டி மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஏற்கெனவே தீவிர ஆதரவைப் பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சி, தற்போது மொன்றியல் பிராந்தியத்திலுள்ள ஆங்கில மொழி வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம், கியூபெக் மாகாணச் சட்டசபையில் குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்ற முடியும் எனத் துஹேம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முந்தைய செய்தி AI குறித்து ‘மிகவும் எதிர்மறையான சக்திகள்’ மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை எழுப்புகிறது : டிரம்ப்
அடுத்த செய்தி மொன்றியலில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
கனடாமுதன்மை செய்தி

பதிலடி வரிகளால் பதில் சொல்ல தயாராகும் கனடா, மெக்சிக்கோ.

மார்ச் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தில் 320 ஊழியர்கள் பணிநீக்கம்!

செப்டம்பர் 4, 2025
கியூபெக்

‘மேப்பிள் சிரப்’ தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தாக்கல்

ஏப்ரல் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் தேசிய ஹோலோகாஸ்ட்டில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு

ஜூன் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?