மொன்றியல் நகரில் விடுதி (Bar) ஒன்றிற்கு வெளியே இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் யுவதி ஒருவர் படுகாயமடைந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மொன்றியலின் ‘வில்லேரே–செயின்ட்-மிஷேல்–பார்க்-எக்ஸ்டென்ஷன்’ (Villeray—Saint-Michel—Parc-Extension) பகுதியில் உள்ள 9-ஆவது அவென்யூ மற்றும் ஜாரி வீதி (9th Avenue and Jarry Street) சந்திப்புக்கு அருகாமையில், இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலின் போது, சந்தேகநபர் ஒருவர் வீசிய கல்லானது, 24 வயதுடைய ஒரு யுவதியின் முகப் பகுதி மற்றும் உடலின் மேல் பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளது.
காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோதிலும், தாக்குதலை நடத்திய சந்தேகநபர் அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த யுவதி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த சாட்சியங்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து வரும் பொலிஸார், தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

