Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

அமெரிக்காவின் புதிய வரிகளால் கியூபெக்கில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் அபாயம்!

ஆகஸ்ட் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து, கனடிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத புதிய தீர்வை வரிகள் (Tariffs) காரணமாக, கியூபெக் (Quebec) மாகாணப் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என மாகாணப் பிரதமர் கிறிஸ்டின் ஃபிரஷெட் (Christine Fréchette) எச்சரித்துள்ளார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் இறுதி நாளில் பிரெஞ்சு மொழிப் பாதுகாப்புதொடர்பான கியூபெக்கின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் கலாசாரக்
கொள்கைகளில் அமெரிக்கா தலையிட முயன்றதாகவும், கனடாவின் இறையாண்மையை மீறும் வகையிலான இக்கோரிக்கைகளை ஏற்கமுடியாது எனக் கூறிப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியமை சரியான முடிவு என்றும் ஃபிரஷெட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கியூபெக் நிதி அமைச்சர் எரிக் ஜிரார்ட் (Éric Girard) இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், புதிய வரிகளால் மாகாணத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் இழக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்படும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு கியூபெக் மாகாணப் பொருளாதார அமைச்சர் பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) இரு சிறப்பு நிதி உதவித் திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்டு, அமெரிக்க வரிகளால் வருமானம் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் முதன்மைத் துறை நிறுவனங்களுக்கு 24 மாத காலச் சலுகைக் காலத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படும் என, கியூபெக் மாகாணப் பொருளாதார அமைச்சர் பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 1 மில்லியன் முதல் 2 மில்லியன் டொலர் வரை வருவாய் ஈட்டும் சிறிய நிறுவனங்களுக்கு $150,000 டொலர் வரையில் கடனுதவி 12 மாத
காலச் சலுகையுடன் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி அவசர நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது கியூபெக் மாகாண அரசு
அடுத்த செய்தி ஐஸ் கட்டிகளை கைப்பற்றச் சென்ற சுகாதார பரிசோதகர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா மாகாணத்தில் பொது வாக்கெடுப்புகளுக்கான விதிகள் தளர்த்தப்படவுள்ளன

ஜூலை 1, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்”License Plates” மாற்றாமல் வாகனம் பயன்படுத்தினால் 336 டொலர் அபராதம்!

ஜனவரி 6, 2026
கியூபெக்

கியூபெக் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் மீதான குற்றச்சாட்டு சட்டவலுவற்றது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மே 13, 2026
கியூபெக்

கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்

ஜூலை 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?