Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட கனடியப் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை மூன்று  நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வரிகள் நடைமுறைக்கு வர இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான காலமே இருந்த பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக உடன்பாடு  எட்டப்பட்டுள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் மார்க் கார்னி, ஆவணங்கள் இறுதி செய்யப்படும் வரை இந்த வரி விதிப்பை ஒத்திவைக்க அமெரிக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேர்ச்சுவார்த்தையில், அமெரிக்காவின் தற்போதைய முன்மொழிவுகள் போதுமானதாக இல்லை என கனடியத் தரப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கனேடிய உற்பத்திகள் மீதான புதிய 50 சதவீத வரியை முற்றிலும் ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், இரும்பு (Steel), அலுமினியம் மற்றும் வாகனத் துறைகள் மீது அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள பிற வரிகளையும் குறைக்க வேண்டும் என கனடா வலியுறுத்துகிறது.

டொனால்ட் ட்ரம்ப்பினால் விதிக்கப்பட்ட இந்தப் புதிய வரிகள் அமலுக்கு வந்தால் இருநாட்டு வணிகங்களும் நுகர்வோரும் மிகக் கடுமையான  இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க வர்த்தக சபை (U.S. Chamber of Commerce) எச்சரித்துள்ளது.

“கூடுதல் வரிகள் இருநாட்டுப் பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன், அமெரிக்கக் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும், மேலும்  வர்த்தகத்தைச் சார்ந்துள்ள சுமார் 1.3 கோடி அமெரிக்க வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என அமெரிக்க வர்த்தக சபையின் மூத்த துணைத் தலைவர் நீல் ஹெரிங்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் நகரின் வீதிப் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக் எடுக்கப்படும் – சொராயா மார்ட்டினெஸ்
அடுத்த செய்தி சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் உயிருக்கு ஆபத்து – மத்திய பொலிஸார் 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சைகயைினால் சர்ச்சையில் சிக்கினார் மனிடோபா எதிர்க்கட்சித் தலைவர்!

அக்டோபர் 12, 2025
கனடா

பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

ஜனவரி 1, 2026
கனடாமுதன்மை செய்தி

வான்கூவரில் செயற்கை நுண்ணறிவு தரவு திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு

மே 24, 2026
கனடா

கனடா தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக சபையின் விருது விழா

டிசம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?