Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், த.வெ.க. அரசு பொறுப்பேற்றபோது புதிய யுகம் பிறப்பதாகக் கூறப்பட்ட போதிலும், கடந்த 100 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 546 குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாகக் சாடியுள்ளார்.

குறிப்பாக, போதைப்பொருள் புழக்கம் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், கோவையில் போதைப்பொருள் விற்பனை குறித்துக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் அளித்த கல்லூரி மாணவன் அமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தகவல் கொடுத்த மாணவனின் விபரத்தைக் காவல்துறையே போதை கும்பலிடம் கசியவிட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டைக் சுமத்தினார்.

மேலும், திருவொற்றியூரில் இரு அமைச்சர்கள் விரட்டியடிக்கப்பட்டது, தண்டையார்பேட்டை மற்றும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள், வேலூரில் பெண் காவலர் தாக்கப்பட்ட நிகழ்வு ஆகியவற்றை வரிசைப்படுத்தி, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சந்திசிரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையும் முதலமைச்சரும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய பரந்தாமன், தற்போதைய அரசைக் காட்டிலும் எதிர்க்கட்சியான திமுக மீதே மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.

இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய த.வெ.க. அரசை ‘சர்க்கஸ் சர்க்கார்’ எனக் கடுமையாக விமர்சித்த அவர், முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து
அடுத்த செய்தி தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுப்பு

ஜனவரி 6, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

Get Out’ கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் த.வெ.க தலைவர் விஜய்

பிப்ரவரி 26, 2025
இந்தியா

திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 6, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம்-மு.க. ஸ்டாலின்!

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?